பிப்.27, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு


சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று திங்கள்கிழமை (பிப்.27) சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.41,608-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து இறங்கி வந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து, ரூ.5,201-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.41,608-க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.44,504 க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.69.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.69,000-ஆக இருக்கிறது.


 

Comments