கழுத்தளவு பாய்ந்த வெள்ள நீரில் நின்று ரிப்போர்ட் செய்த பாகிஸ்தான் செய்தியாளர் | வைரல் வீடியோ

 


பாகிஸ்தானில் கழுத்தளவு பாய்ந்து செல்லும் வெள்ள நீரில் தனது உயிரை பணயம் வைத்து செய்தி வழங்கியுள்ளார் செய்தியாளர் ஒருவர். அவரது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பதிவாகி உள்ளது. சுமார் 9 லட்சம் வீடுகள் மழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. 1000 பேர் உயிரிழந்துள்ளனர். காய்கறி மற்றும் பழங்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்தச் சூழலில் லைவ் ரிப்போர்டிங் பணிக்காக தனது உயிரையும் காட்டாற்று வெள்ளத்தில் இறங்கி ரிப்போர்ட் செய்துள்ளார் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர். தான் இருக்கும் களத்தின் சூழலை சுட்டிக்காட்டும் வகையில் அவரே வெள்ளத்தில் இறங்கியுள்ளார். அதோடு மைக்கை கையில் பிடித்துக் கொண்டு வெள்ள நீரை சமாளித்தபடி ரிப்போர்ட் செய்துள்ளார் அவர். இது பரவலாக உலக அளவில் கவனம் பெற்று வருகிறது.

முன்னதாக, பாகிஸ்தானில் சாந்த் நவாப் எனும் செய்தியாளர் புழுதி புயல் குறித்து நிலையை விவரிக்க ஒட்டகத்தில் சவாரி செய்து ரிப்போர்ட் செய்திருந்தார். இவர் 2008 ரயில் நிலைய நியூஸ் ரிப்போர்டிங் பணிக்காகவும் பரவலாக அறியப்படுகிறார்.


#Pakistan #Flood #Water #Reporting #ReporterDiary #News #NewsUpdates #Breakingnews #Metropeoplenews #Metropeople


Click here For More Details 👇👇👇
http://metropeople.in/the-pakistani-reporter-stood-in-neck-deep-flood-water-and-reported-viral-video/

Comments