முதல்வர் ஸ்டாலின் பாகுபாடின்றி விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து கூறவேண்டும்: எல்.முருகன்


  "தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிக மிக சீரழிந்துள்ளது. பெண்கள் நகை அணிந்துகொண்டு வெளியே செல்ல முடியவில்லை” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "விநாயகர் சதுர்த்தி மட்டுமின்றி, பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படுகின்ற அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டியது அனைவரது கடமையாக இருக்கிறது. குறிப்பாக திமுக தலைவர், அவர் அக்கட்சியின் தலைவராக இருந்து வாழ்த்து கூறவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால், முதல்வராக இருப்பவர் அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூறுவதுதான் முறையாக இருக்கும். எனவே, முதல்வர் எந்தப் பாகுபாடும் இல்லாமல் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிக மிக சீரழிந்துள்ளது. பெண்கள் நகை அணிந்துகொண்டு வெளியே செல்ல முடியவில்லை. இருசக்கர வாகனத்தில் சென்றால்கூட அவர்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. அனைத்து பகுதிகளிலும் கஞ்சாவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய அளவில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு தமிழக அரசு முன்வரவேண்டும்" என்று அவர் கூறினார்.


#MetroPeople #News #newsupdates #TodayNews #India #Tamilnadu #Mkstalin #LMurugan #VinayagarChathurthi


Comments