தகவல் தொடர்பு சேவைக்கான ஜிசாட்-24 செயற்கைகோள் வெற்றிகரமாக பாய்ந்தது

 

புதுடெல்லி: தகவல் தொடர்பு சேவைக்கான ஜிசாட்-40 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-40 செயற்கைக்கோள் தகவல் தொழில்நுட்ப சேவைக்காக நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துக்காக (என்எஸ்ஐஎல்) உருவாக்கப்பட்டது. இது டிடிஎச் தேவைகளை பூர்த்தி செய்யும் 24-கேயூ பேண்ட் தகவல் தொழில்நுட்ப செயற்கை கோளாகும். இதுதொடர்பாக, என்எஸ்ஐஎல்லின் வர்த்தக பிரிவான பெங்களூரு இஸ்ரோ தலைமையகம் கூறும் போது, `தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் உள்ள கொரு ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டப்படி நேற்று அதிகாலை 3.20 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.


இது அதிக எடையை சுமந்து செல்லும் ஏரியான்-5 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இதன் எடை 4,180 கிலோ. திட்டமிட்டப்படி சரியான பாதையில் சென்ற ஏரியான்-5 ராக்கெட், புவிசுற்றுவட்டப் பாதைக்கு சென்றதும், செயற்கைக்கோள் பிரிக்கப்பட்டு, திட்டமிட்ட இலக்கில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது,’ என்று தெரிவித்தது. இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறும் போது, `முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டிடிஎச் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-24 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது, என்எஸ்ஐஎல் வராலற்றில் முக்கிய மைல் கல்லாகும்,’ என்று தெரிவித்தார். இத்துடன் சேர்த்து தகவல் தொழில்நுட்பத்துக்கான மலேசியாவின் மீசாட்-3 செயற்கைக்கோளும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
#Jihad24 #satellite #dailynews #news #newsupdate #metropeoplenews #Metropeople

Comments