மதுரையில் வைகை ஆற்றில் பெருக் கெடுத்து ஓடும் தண்ணீரால் யானைக்கல் உள்ளிட்ட தரைப்பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இதனால் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலச் சுழற்சி காரணமாக தேனி, மதுரை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
குறிப்பாக மதுரை வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. மதுரை யானைக்கல் தரைப் பாலம், குருவிக்காரன் சாலை தற்காலிக தரைப்பாலம் நேற்று மூழ்கின.
இதனால் யானைக்கல் தரைப் பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், தரைக்கடைகள் போலீ ஸாரால் அப்புறப்படுத்தப்பட்டன. வாக னங்கள், பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலங் களில் போக்குவரத்து போலீஸார் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வைகை கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மைக் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment